அன்பாக வாழக் கற்றுக்கொள்
உனக்கும் ஒரு நேரம் வரும்
உன்னைச் சுற்றி நடந்த சூழ்ச்சி புரிந்து,
சூழ்ச்சி செய்தவர்களிடமிருந்து
விலகிச் செல்லும் நேரம் வரும்!
உன்னை இகழ்ந்தவர்களே பிழையை
உணர்ந்து புகழவும் செய்வர்;
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
நடப்பவை நல்லதாக அமையட்டும்!
நல்லவர்களிடம் அன்பைச் செலுத்து,
மற்றவர்களுக்கு நற்பண்புகளைத் தர
இறைவனிடம் வேண்டிக் கொள்;
அன்பாக வாழக் கற்றுக் கொள்!
அன்போ(டு) இயைந்த வழக்கென்ப, ஆருயிர்க்(கு)
என்போ(டு) இயைந்த தொடர்பு! - குறள் 73 அன்புடைமை