என் புலம்பல் இப்போது
தனிமை -என்
உறவுகளை விட்டு-நான்
தனிமையில் ....
என் சிந்தணையும் -இப்போதெல்லாம்
தனிமையில் -கூடி சிந்திக்க
கூட்டாய் யாருமில்லை.......
நான் சிலகாலம் அனாதை-இங்கு
வந்த பின் நான் -உறவுகளுக்குள்
ஒரு நட்ச்சத்திரம்..!!
இன்று விடிவெள்ளியாய் -நான்
ஒற்றை நட்சத்திரமாய்-இங்கு
காத்திருக்கின்றேன்..!
என் புலம்பல் இப்போது -எனக்கு
மெல்லியதாய் கேட்கின்றது -இது
உங்களுக்கு கேட்க்க நியாயமில்லை...