ஒரு வளரும் கவிஞன்

ஒரு வளரும் கவிஞன்
முகநூலில் எழுதுகிறான்

வலைப்பூ தொடங்குகிறான்
பத்திரிக்கைகளுக்கு படைப்புகள்
அனுப்புகிறான்

வளர்ந்த கவிஞர்கள் பாராட்டை
பெறுகிறான்
புத்தகம் வெளியிடுகிறான்

விழா நடத்துகிறான்
ஊடகங்களை அழைக்கிறான்
பேட்டி தருகிறான்

விருது வாங்குகிறான்
ஆகச்சிறந்த கவி ஆகிறான்

ஆனாலும் மனைவி கொஞ்சம்
அதட்டிக் கேட்டாலும்
"ஐயோ நான் கவிதை எழுதுல"
என அனிச்சையாய் பதில் அளிக்கிறான்

(என்னைப்போல?)

எழுதியவர் : செல்வமணி (10-Sep-15, 12:29 am)
பார்வை : 88

மேலே