உனக்காக நான் இல்லை

ஊர் இழந்தேன்
உறவை இழந்தேன்
உன்னை கானாதிருந்தால்
உயிரையும் இழந்திருப்பேன்!

அனைத்தையும் அள்ளிச்சென்ற
ஆழிப்பேரலைக்கு என்மீது
காதல் இல்லை போலும்
கருணையின்றி கரை ஓதிக்கிவிட்டது!

உன்ன உணவில்லை
உடுத்த உடை இல்லை
இருக்க இடமில்லை
உடம்பில் ஓடும் உதிரத்தை தவிர வேறேதும் சொந்தமில்லை!

எதன் மீதும் பற்றில்லை
பாசத்தை பகிர ஆள் இல்லை
நேசத்தை பொழிய யாருமில்லை
எல்லாம் இருந்தும் எதுவுமே எனதில்லை!

ஓர்நாளில் அனாதை ஆனேன்
காலத்தால் கன்னி ஆனேன்
உன்னை கண்டபின் கன்னி தாயானேன்!

சின்ன சின்ன குறும்புகள்
செல்லமான கண்சிமிட்டல்கள்
இதழ்பிரியா புன்சிரிப்பு
இனம்புரியா பேரழுகை!

ஒருவிரல் பற்றும் மென்கரம்
எட்டி உதைக்கும் செம்பாதம்
சேலை நிணைக்கும் சிறுநீர்
மார்கடிக்கும் குறும்பல்!

என் மடி சுமக்கா
முதல் மைந்தன்
என் தனிமையை
தாய்மையாக்கிய
தலைமகன்!

உன்னை கண்டெடுத்த
சில நாழிகைகளில்
நானும் மலர்ந்தேன்
புத்தம் புது மலராய்!

புதிதாக ஓர் விடியல்
புலர்ந்தது நமக்காக
உனக்காக நான் இல்லை
என்றென்றும்
""" எனக்காகவே நீ!!! """

"""" சுனாமியால் பாதிக்கப்பட்ட இளம் கன்னிப்பெண்ணின் (கண்ணீர்) கதை இங்கே கவிதையாய்"""

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (10-Sep-15, 9:06 pm)
Tanglish : unakaaga naan illai
பார்வை : 112

மேலே