இயற்கை
கிளைகளில் அமர்ந்து குயில்கள் பாடுகின்றன
ராகங்களில் மூச்செடுத்து மூங்கில்கள் இசைக்கின்றன
கடல் அலைகளில் ஓங்கார நாதம் கேட்கிறது
இனிய நிலவு தேன்மழை பொழிகிறது
தென்னையின் கீற்றுகள் பன்னீர் தெளிக்கிறது
கீழ்வானம் உனக்காக நடனமாடுகிறது
வெண்மேகங்கள் உன்னையே சுற்றிச்சுற்றி காதலிக்கிறது
நீ கண்டுக்கொள்ளவில்லையாம் கண்ணீர் வடிக்கிறது
மரங்கள் கனிகளை தருகிறது -- உண்ட மயக்கமா..
உனக்கு நிழலும் தருகிறது
மலர்கள் காவியம் பாடுகிறது
இடைவேளையில் மணம் வீசுகிறது
தேனருவிகள் உன்னை தழுவிக் குளிப்பாட்டுகிறது
ஆறுகள் உன்னைத் தேடித்தேடி தாகம் தீர்க்கிறது
காடுகள் உன்னை கட்டி அணைத்து முத்தமிடுகிறது
மலையின் உச்சி எதுவும் சாத்தியம் என்கிறது
பள்ளத்தாக்கு பனிவு வேண்டும் என்கிறது
இப்படி ........
இயற்கை உன்னை நேசிக்கிறது
நீ மட்டும் பணத்தைதான் நேசிக்கிறாய்