உன் நினைவுகள்-ஆனந்தி

உனக்காக
உன்னையே விட்டு தர
சொன்னாய் ......

செய்தேன்....

நீ வாழ நான்
செய்தது தியாகம்....-இது உனக்கு
புரியாமல் போனது என்ன நியாயம்....

வாழ்ந்து காட்டுவேன்
என்ற இலட்சியம் - இன்று
அலட்சியம் ஆனது
உன் நினைவுகளினால்....

மனக்கோட்டை இன்று
மணல் கோட்டையானது...

நித்தம் நித்தம்
பூத்து இறக்கும் கோடி
பூக்களின்
கல்லறையானேன்....

உலகின் மொத்த
வலிகளுக்கும்
உருவானேன்.....

என் அத்தனை
தனிமைகளிலும் சேர்ந்து
கொள்வாய் எண்ணங்களில்
கற்பனையாய்
முன்பெல்லாம்
அன்பாய்
அக்கறையாய்....

இப்பொழுதெல்லாம்
எல்லாம்
அலட்சியமாய்
ஆணவமாய்....

இன்னும் என்
பிரமிப்புகளுக்கு மட்டும்
பஞ்சமேயில்லை
உன் கரங்களை அல்லவா
பற்றி உலவி கொண்டிருக்கிறேன்
கற்பனைகளில்.....

எழுதியவர் : ஆனந்தி. ரா (13-Sep-15, 8:22 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 1684

மேலே