கடன் அன்பை முறிக்கும்

ஆயுட்கால கடன் வாங்கியுள்ளாய்
ஆதாரத்தோடும் வாங்கி விட்டாய்
சபை நடுவே வாங்கியுள்ளாய்
சன்னிதியில் உறுதி செய்தாய்!
கடன் கொடுத்தவன் உன் மாமன்
கடனாளி மருமகன் நீ
கடன் தொகையாம் வரதட்சணை
கட்டுக் கட்டாய் வாங்கி விட்டாய்!
வாங்கி விட்ட கடனுக்காய் - உன் மாமன்
வதைப்பவளாம் தன் மகளிடம் ஒப்படைப்பான்!
கடைசிக் காசுவரை நீயும்
கட்டாயமாய் வட்டியோடு
திருப்பிச் செலுத்தி முடிக்காமல்
தப்பிக்க முடியாது அச்சிறை வதையிலிருந்து.