சோகம் பிளஸ் நேர்மை மைனஸ்
பண்பலை வானொலி நிலையத்திற்கு ஒரு தொலைபேசி வந்தது, பேசியவர் தான் ஒரு மணிபர்ஸை கண்டெடுத்திருப்பதாக தெரிவித்தார்.அதில் 15,000ரொக்கம்,கிரிடிட் கார்டு, அத்துடன் அடையாள அட்டை இதெல்லாம் இருப்பதாக தெரிவித்தார். அதன் பின் உரையாடல்:
கிரேட்....! அந்த அடையாள அட்டையில முகவரி இருக்குமே..
இருக்குது..இருக்குது....பரங்கிப் பேட்டை பழனிச்சாமி........
ஆகா...என்ன நேர்மை! உரியவரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்களா?
இல்லைங்க...பழனிச்சாமிக்கு ஒரு சோகப் பாடலைஒலிபரப்ப முடியுமா? அதை அவருக்கு டெடிகேட் பண்ண விரும்பறேன்........!!
- ப.பி.