ஐந்தாண்டு ஆண்டவன் லிமரைக்கூ

தேருதலில் நீயளிக்கும் வாக்கு
மாறுதலை ஏற்படுத்த வேண்டுமென மேடையிலே
கூறியவரும் மாறிவிட்டார் வாக்கு
கொள்கை கொடிகட்டித் தூக்கு
வெள்ளை வேட்டிக்கட்டி கொள்ளையிட்ட தேசிய
கள்வர்க்கு வரலாம் தூக்கு.
மக்களுக்கு செய்திடணும் சேவை:
மனமார பொய்யுரைபோர் மந்திரியாய் ஆகிவிட
துக்கமுறும் நாமவர்க்கைப் பாவை.
ஐந்தாண்டு ஒருநாட்டை ஆண்டவன்
அனைத்துத் துறைகளிலும் சுருட்டியதைப் பார்த்து
மெய்யுறைந்து கல்லானான் ஆண்டவன்
மெய்யன் நடராஜ்