காதல் சரசங்கள் - தோற்றும் வெற்றி

பெண்ணே,
வீழ்ச்சியும் எழுச்சியும்
புறத்துக்கல்ல...
வீழ்வதும் எழுவதும்
போர்க்குணமாமே!
வீழ்ந்தெழுந்த வீரரிருவர்...
வெற்றியைத் தமக்காய்
கொண்டதும் விந்தை!
முதலடி கொடுத்தோன் யாராகினுமே
முடிவில் யாரும் வெல்லுதலில்லை!
அரசுடைமை வேண்டுதல் வீணே - இங்கே
அடங்குதல் மட்டுமே முறையாமே!
தோற்றுக் கொண்டாடும் வெற்றி - இது
தொன்று தொட்ட வீர வெற்றி!!!