விநாயகனே வினைத்தீர்ப்பாய்

அருகம் புல்லெடுத்து
அழகழகாய் அலங்கரித்து
வெள்ளெருக்குப் பூப்பரித்து
வெள்ளிமணி மாலையிட்டு
கொழுக்கட்டைப் பூரணத்தோடு
கொய்யாக் கனியும் வச்சி
சுண்டலோடு பொரியும் வச்சி
சுடச்சுட சோளக்கருதும் வச்சி
முந்தி விநாயகனே
தொந்தி கணபதியே
துதிப்பாடி வேண்டுகிறேன்
அருள்பாவி மூத்தவனே . . .!

எழுதியவர் : (17-Sep-15, 12:17 pm)
பார்வை : 94

மேலே