அர்த்தமுள்ள மோதல் ஆனப்பின்னால் விலகல்

அர்த்தமுள்ள மோதல் ஆனப்பின்னால் விலகல்

அர்த்தமுள்ள மோதல் ஆனப்பின்னால் விலகல்
============================================

ஆமாம் நானிருக்கிறேன் என்றுச்சொல்லி
என் வெறுமையை அர்த்தமாக்கினான்
பற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எழும்
பூகம்பத்திற்கிடையில்
நா ரத்தம் கேட்கிறது
இடைவெளி உணர்த்துகிறாயா என
நானில்லை நானில்லை
பின்னாலிருந்து என் கவிதைகளை
வாசித்துக்கொண்டுதானே இருக்கிறாய்

என் நேசித்தலுக்கான அலகு
நீ நான் வரை மட்டுந்தான்
நீ விஸ்தரித்த உன் குறும்பின் அகண்ட எல்லைக்குள்
என் பிடிவாதம் மட்டுமே
சிறையாகிருக்க நினைத்ததை
புரிந்துமா,,சென்றுவிட்டாய் ம்ம்ம்
எழுத்தாணிக்கு நோவு கொடுத்துவிட்டு
எங்கே உன் மூக்குக் கண்ணாடியை
சிங்காரித்துக்கொண்டிருக்கிறாய் ம்ம்ம்ம்??

என் செவியாடும் ஜிமிக்கித்தோடுகளிலும்
என் மடியாடும் கொலுசொலியிலும்
உன்னைப்பற்றிய எல்லா இரகசியங்களையும்
தொலைத்துவிட்டாய்
இனி உனக்கு உறக்கமில்லையடா
என் அகம்பாவம் சிரிக்கிறது
என்றாவது நீ வந்துதான் தீருவாய் என்று
உன் ஆளுமை ஜெய்க்கின்றது
நீ கொடுத்துச்சென்ற முனங்கல்கள் வரை ம்ம்ம்

பிரிந்த இதழ்களின் சாவி
பிரியாத மொட்டொன்றின் கதவு திறக்கிறது
சிக்கிக்கொண்ட சாவிக்கும்
வாங்கிக்கொண்ட மொட்டிற்கும்
அர்த்தமுள்ள மோதல்,,ஆனப்பின்னால் விலகல்
விளையாலடாமா ம்ம்ம் என்று
ஒற்றைக் கண்ணசைத்து
ஒரு ஓராமாய் சிரித்துச்சொன்ன
அன்றைய அவனின்
வயது நிரம்பிய விடுகதைக்குமுன்னால்
விடை சொல்லாமல் விலகினேன்,,
பின்பு நோட்டத்தால்
தின்றுத்தீர்த்த "அவன்" நேரசைகளுக்கு
சொற்களால் அடைக்கலம் தந்தேன் ம்ம்ம்

மாமிச உண்ணிக்கு
மரநிழலில் என்ன வேலை என்றபோது
தழல் ஆற்றிட தேகம் வேண்டுமென்றான்
தண்ணீருக்கு ஏராள முத்தங்களை
வைத்துக்கொண்டு ம்ம்ம்

சேலைத்தள்ளி காற்றுத்தொடும்
இடங்கள் எல்லாம்
முட்பிடுங்கும் உன் முத்த அறுவடைக்கு
பயிர்விட்டிருக்கின்றன
வா வந்து அறுத்துச்செல் குத்தகைக்காரா ம்ம்ம்ம்,,,,,

பனிக்குழையை ஏந்திய மாச்சில்களைப்போல
இவள் நனைய நனைய
பிரபுத்துவம் செய்
உருகி ஒழுகி பொத்தலாக்கிச்செல்
இனி உன்னால்
நனையாத நொடிகள் என்று
என்னில் எதுவுமே இருக்கவேண்டாம் ம்ம்ம்,,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (18-Sep-15, 4:20 am)
பார்வை : 220

மேலே