நகர வாசி

தோட்டத்து மரக்கிளையில்
குயிலின இசை.....!!!!
அதிகாலை அறிவிக்க
சேவலின் கூவல்....!!!!
அசைபோடும் மாடுகள்
சொல்லும் அம்மா கூப்பாடு...!!!
காற்றில் வரும் பெண்களின்
நாற்று நாடும் பாடல் .....!!!
ஊரே ஒன்று சேர்க்கும்
திருவிழா.....!!!!
தாத்தா பெயர் கொண்டு
தெரிந்த மனிதர்கள்....!!!
கிணற்று குளியல்....!!!!
தெரியாத முகங்கள் இல்லை....!!!!
நிழல் சொல்லும் நேரங்கள்....!!!
இத்தனையும் இழந்த
நகரவாசி ஆகிவிட்டேன்
இயந்திர மனிதனாக.....!!!!
என் போன்றவார்கள் சேர்ந்து
கிராமம் நகர வாழ்க்கை
மாறிவருகிறது அதான்
இனிமை தெரியாமல்....!!!!