சூழ்நிலை கைதிகள்
..."" சூழ்நிலை கைதிகள் ""...
விடியலை தேடும் பறவை
வெளிச்சமான உலகில்
இருட்டாகிப்போன வாழ்வு
ஆசைகளும் கனவுகளும்
கடலலையாய் மனமறிக்க
விசாவோடு விடைபெற்றோம் !!!
இனியேனும் கடனில்லாத
காஞ்சி குடித்திட கடல்
தாண்டினோம் கண்ணீரோடு
சிறியதாய் சேர்த்துவைத்து
பெரியதாய் வாழ்ந்துவிட
எண்ணங்களை சுமந்து !!!
கொதிக்கும் பாலைநிலத்தில்
அனல் பறக்கும் காற்றிலே
அணிந்த ஆடையவிழ்த்து
கல்லை தலையனையாக்கி
கற்பனை குளிரூட்டியாக்கி
கனவுலக காட்சிப்பயணம் !!!
தூசு படிந்த வீணையாய்
மீட்டப்படா நாணல்போல்
முகாரி ராகம் இசைக்கும்
விதியின் விலக்காய் யாம்
விவாகம் முடிந்தபின்னும்
பிரமச்சரிய வாழ்கையில் !!!
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...