முற்றுப்பெறவில்லை

இரவுகள் இன்பமானது அவளோடு அன்று
இரவுகள் நீளமானது அவள் நினைவோடு இன்று ..
இரும்புக்குணம் கொண்டு உறங்குகிறேன்
விடுகதை சொல்லும் விடியலுக்காக..
கண்ணீரையும் பரிசளித்து ,அவள் கனவையும் கலைத்து
வாழ்வாதாரம் வாதிடும் முன் வந்துவிட்டேன் கடல் கடந்து..
இறைவன் எழுதிய என் ஏட்டில் மாற்றம் தேடி பயணிக்கிறேன்
பாசங்களை தொலைத்து வேசங்கள் அணிந்து..
என்ன செய்து உன்னை திருப்தி படுத்த
முடியவில்லை உள்ளக்குமுறல் முற்றுப்பெறவில்லை...