தொடுதிரை கொலைகாரன்

தாயவள் அரவணைப்பு அவலக்கொலை!!!
தந்தையவர் அறிவுரை அலட்சியக்கொலை!!!
தங்கையவள் பாசம் பரிதாபக்கொலை!!!
தம்பியவன் நேசம் நேரிடைக்கொலை!!!
தாரமவள் அன்பு அநியாயக்கொலை!!!
கொலையில் அத்தனையும் தொலைத்துவிட்டு....
என்னை தொட்டுத் தொட்டு எவ்வுணர்ச்சி
பெற முயல்கிறாய்.... உன் விரலும் நானும்
மட்டுமே வாழ்கிறோம் தர்ம வாழ்க்கை!!!!
நான் ஒரு கொலைகாரன் உன் உறவை ஒழித்து
உன் உணர்வை ஒழித்து.... நடைபிணமென
விடுத்து....
ஜாக்கிரதை...!!! உன்னையும் அழிப்பேன்....!!!

எழுதியவர் : திலிபன்.ரா (19-Sep-15, 9:15 pm)
பார்வை : 81

மேலே