செய் அல்லது செய்

கவிதை படி..
காவியம் படை..
நிலவில் இறங்கு..
நீள்விழி தேடு
முயற்சி விதை..
முன்னேற்றம் காண்..
மனிதம் உணர்..
மகத்துவம் வளர்..
மெய் தேடு..
மேனியை பேணு..
மிச்சம் சேமி..
மிஞ்சுவதை பார்!
காதல் செய்..
சாதல் வெறு!
மீண்டும் ..
கவிதை படி..
காவியம் படை..
இருப்பது ஒரு வாழ்க்கை
இறுதிவரை வாழு ..
கவலையில் தினம் மாளாது!

எழுதியவர் : கருணா (21-Sep-15, 3:52 pm)
பார்வை : 132

மேலே