ஏன்
ஏன் எழுதுகிறாய்...
வேறு வேலையில்லையா....
எண்ணங்கள் முட்டித்தள்ளுதா...
சிந்தனைகள் சிதறிக் கொட்டுதா...
எழுத்தால் எவர் விதியை மாற்றவோ...
புதுவீதி அமைத்துப பூத்தூவவா....
நிறுத்து....! முதலில்
நீ சொல்வதை நீயே கேட்பதில்லை ...
உன் சொல்லை யார் கேட்பார்கள் ..
உன் ஓரலை ஓரடி செல்லும்முன்
அவர்கள் சுனாமியுன்னை மூழ்கடித்துவிடும்
முதலில் போய் உன் எழுத்தையெல்லாம்
அழித்துவிட்டு வா....
உன் சொல் உரத்துக் கேள்
மௌனங்கள் கவி பாடட்டும்...
---- முரளி