இவைகளில் எதுவோ நீயே கூறடி
# இறுதிவரை முயற்சித்தும்
கடந்து சென்ற காற்றை இரு
கரங்களுக்குள் சிறைபிடித்தவர்
எவருமிலர்....!!!!
--------------------------
#வீசும் காற்றைவிட
வேகமாக சிறகடித்து பறந்திருந்த என்னை.. நீ மட்டும் காதல் வானில்
கட்டுக்குள் கொணர்ந்த ரகசியம்
இவைகளில் எதுவோ நீயே கூறடி...!!!!
--------------------------
# ஈரைந்து மாதங்கள்
காத்திருந்து எனை ஈன்றெடுத்த
எனதன்னையின் பரிவு
உனது இரு விழிதனில் கண்டதாலோ ....!!!
------------------------------
# தலை சிறந்த சிற்பியின்
மிகச்சிறந்த சிற்பமாய்
உனை செதுக்க... பொற்சிலையாய்
நீ என் கண்முன்னே வந்ததாலோ...!
நான் கற்சிலையாய்
உனதருகில் நின்றதாலோ...!!!!
-----------------------------
# உனது இடைதனில்
இடறி வீழ்ந்த எனது இளமையை மீட்க்க முயற்ச்சித்து.. எனது ஆண்மையும் உன் வழி சென்றதாலோ...!!!
------------------------------
# மிதம் மிஞ்சிய எதுவும் நஞ்சாகும்!
ஆனால் உன் இதழ் சிந்தும்
தேனமுத புன்னகை மட்டும்!!!
தெவிட்டாத பேரின்பமாய் ஆனதாலோ...!!!
------------------------------
# ஆயிரம் பெண்கள்
எனைச்சுற்றி வந்து
காதல் மொழியில் கதைத்தாலும் உன் ஒற்றை மௌனம் மட்டும்
எனை நிலைகுலைத்தாலோ..!!!!
--------------------------
#மொழிகள் சில இருந்தென்னப்பயன்....
வார்த்தைகள் பல தெரிந்தென்னப்பயன்...
உன் இரு காலடி ஓசையின்
முன்னே ஒலியிழந்து..
எனதிரு இதழ்களும் உனது பெயரை மட்டுமே உச்சரித்ததாலோ....
--------------------------
# மேற்ச்சொன்ன யாவும்
ஒன்று சேர.. என் மனதில்
நீ மட்டும் நிலைகொண்ட
பெண்மையாய் நிறைந்திட்டதாலோ...!!!
--------------------------
இவைகளில் எதுவோ நீயே கூறடி ????
--------------------------