ஏக்கம்
அன்பே
நான் வீட்டில் இல்லாதபோது
நீ என் வீட்டின்
ஜன்னலையோ அல்லது வாசலையோ
பார்க்க நேர்ந்தால்
உன்
செவிகளை கொஞ்சம்
கூர்மையாக வைத்து கேட்டுப்பார்
" பாவம் அவனுக்கு இவள் தரிசனம்
காண கொடுத்துக் வைக்கவில்லை "என
அவைகள் எனக்காக வருத்தபடுவதை கேட்கலாம்
நான்
இல்லையான
நீ பார்க்காமலும் போய்விடாதே
"நீ இல்லாமல் அவள் எங்களை
காண மறுக்கிறாள் உடனே நீ வா"என
அவைகள் எனக்கு தந்தி அடிக்கவும் நேரிடலாம்
ஆகையால்
உன் பார்வையை
ஒரு நொடியென வீசிவிட்டு போ.........