காதல் விளையாட்டு

தவழ்ந்து நடந்த
தருணங்களில் "சாஞ்சாடம்மா சாஞ்சாடு"

ஓடியாடிய பருவத்தில்
"ஒளிஞ்சான் பிடிச்சான்"

பாலப் பருவத்தில் "பாண்டியாட்டம்"

இத்தனை காலமும்
அமைதியான விளையாட்டு
விளையாடிவிட்டு......
நன்கு வளர்ந்து
இளம் பருவ மங்கையாக
உலவும் போது மட்டும்
பெண்களுக்கு ஏன் இந்த
ஆண்களின் இதயத்தோடு
விளையாடும் "காதல் விளையாட்டு"?


எழுதியவர் : சோ. அ. உதயச்சந்திரன், நெட்ட (29-May-11, 1:00 pm)
சேர்த்தது : udhayachandiran
பார்வை : 338

மேலே