இலக்கணமே நீதான்
அதிகம் படிக்காத கிராமியத்தான்
எனக்குள் எப்படி இறங்கிப் போனது
இலக்கணம் ..?
மேலோட்டத் தமிழ் மட்டுமே
தெரிந்த நான்
உனைத் தொடர்ந்ததினால்
அறிந்து கொண்டேனா.
இலக்கணங்களை...!
அல்லது
நீதான் தமிழென்று அறிந்தபின்
தானாக கற்றுக்கொண்டேனா
தமிழ் இலக்கணங்களை....!..!
ஒருவேளை
நீயென்ன இலக்கணத்தின் மறுபிறப்பா ?
எனக்குள் நினைவுகளாய்
இறங்கி வந்து என்னமாய்
இலக்கணம் கற்றுத்தருகிறாய்...!
தூக்கக் கலக்கத்தோடு நீ எழும்போது
கற்றுக்கொள்கிறேன்
எழுவாய்...!
எனைப்பார்க்காத பார்வைகளில்
கற்றுக்கொள்கிறேன்
பயனிலை...! !
கைதீண்டும் வேளையில்
கற்றுக்கொள்கிறேன்
படர்கை...! .!.. !
உன்அருகில் வந்து
இன்னும் சொல்லிட ஆசைதான்...
உன் தந்தையின்
முறுக்கு மீசை கோபத்தில்
அச்சமிருந்தாலும்
சொல்லித்தர
இன்னும் மிச்சமிருக்கிறது
எச்சத்தொகைகள்..