ஆண் பெண் நட்புத் துளிகள்

முதலில்
என் கண்களின் பாா்வைகளைத்தான்
பழக்கினேன் நட்புக்கு...

====================

சமூகம் இன்னும் தடுமாறுகிறது
ஆண் பெண் நட்பு புரியாமல்

==========================

நட்பில்....
மழை என்பது ஒரு நிகழ்வு
பூங்கா என்பது ஒரு இடம்

=======================

காதலுக்கே
தகுதியில்லாதவை
நட்புக்கு மட்டும் எப்படி?

=====================

துப்பட்டாவைச் சரிசெய்யும்
அனிச்சைச் செயல் எதுவும்
இல்லை

=========

பௌதீக மாற்றத்திற்கு ஆட்படாத
வெற்றுடல்கள் அவை

====================

எழுதியவர் : புதிய கோடங்கி (24-Sep-15, 6:47 am)
பார்வை : 176

புதிய படைப்புகள்

மேலே