ஆண் பெண் நட்பு

அழகிய பெண்ணும்
அன்பான ஆணும்
இனியவை பேசி
ஈர்க்கபடும் கருத்தால்
உள்ளம் நுழையும்
ஊதா பூ
எழில்மிகு நட்பு
ஏற்றம் பெறவும்
ஐயம் களையவும்
ஒற்றுமை போற்றவும்
ஓங்கி நின்றால்
கள்ளமில்லா மனதுடன்
காசுக்கு மயங்காது
கிள்ளை மொழி பேசினால்
கீர்த்தி பெரும்
குறுகிய போக்கால்
கூட்டம் சேர்பதே
கொள்கையென கொண்டால்
கானல் நீராய் மாறுமே!

எழுதியவர் : பிரியா வெங்கடேஷ் (25-Sep-15, 11:21 am)
சேர்த்தது : ப்ரியா வென்கடேஷ்
Tanglish : an pen natpu
பார்வை : 297

மேலே