நம் காதல்

இதுவரை எந்த மொழி
இலக்கியம் எழுதாத
ஒரு காதல் காவியம்
உன் கருங்கூந்தல்

இதுவரை வரலாறு
காணத ஒரு சரித்திரம்
நீ என்னை சந்தித்த
முதல் சந்திப்பு

எந்த ஒரு கவிஞனும்
இதுவரை எழுதாத
ஒரு ௧ற்பனை கவிதை
உன் உதட்டோரம்
உதிரும் சிரிப்பு

என் உயிர் உள்ள வரை
உன்னோடு
இருக்க வேண்டும்
நீ பிரிந்திடும் போது
நான் இறந்திட வேண்டும்
நீ மறந்திடும் போது
நான் மடிந்திட வேண்டும்

எழுதியவர் : வேலு வேலு (25-Sep-15, 9:07 am)
பார்வை : 90

மேலே