காதல் சமிக்சை

காதல் சமிக்சை
நம்மிடம்,
பயணம் திசையில் தான்..
இலக்கு எங்கனம் ?

சொல் என்னிடம்,
எப்போது ஆட்கொள்வாய் ?
அதுவரை சுடுகிறது
சலனம், சபலம்
சாத்திரமாய்;

தொடுவானமாய்
நான்,
தூண்டிலாய்
நீ,

துடிப்பது
என் இதயம் தான்
என்றாலும்
அதன் உள்ளே இருப்பது
நீ
வலித்தால்
சொல்லிவிடு
நிறுத்திவிடுகிறேன்,

இதயத்துடிப்பை அல்ல
என் மூச்சை.......

எழுதியவர் : செல்வமணி (25-Sep-15, 9:05 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kaadhal samiksai
பார்வை : 75

மேலே