தனியே தன்னந் தனியே
யாருடனும் கைகோர்த்தபடியோ ..
யாரையும் துணைக்கு அழைத்து சென்றபடியோ..
இல்லாமல் ..
தன்னந் தனியனாக..செல்வதை
அவன் விரும்பி இருக்கலாம்..!
கால் போன போக்கில் போனபடி..
மனம்போனபடி..
வாயில் வந்ததையெல்லாம்..
பேசியபடி..போகவும் ஆசைப்பட்டிருக்கலாம்..!
தனியாக..
காதில் பொருத்தியிருந்த கருவியுடனும்..
கைப்பேசியில் பேசிக்கொண்டே
சாலையைக் கடந்தவன்..
பின்னால்..
வேகமாக வந்த வாகனம்..மோதி
அடிபட்டிருக்கலாம்!
வாகனம் நின்றது..சடாரென்று..
இது எதுவும் தெரியாமல்..
காதலியிடம் பேசியபடி..
கடந்து விட்டான் வாழ்க்கையை..!
மாலையில் அவளுடன் சந்திப்பு..
உறுதி ஆகிவிட்டது ..!
இப்போதாவது ..அவன்
சாலையை கவனித்திருக்கலாம்!