கற்றபின் நிற்க அதற்கு தக
அந்த அடுக்ககத்தின்
ஒரு வீட்டில் ..
வெயில் சாளரத்தின் வழி வந்து
துணையாக இருப்பதை தவிர..
வேறு துணையின்றி
அந்த முதியவரும் அவர் மனைவியும்
இறந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க..
அடுத்த முனையில் ..
எரிச்சலோடு கைப்பேசியை
வீசும் பிள்ளை ..
அயல் நாட்டில் குடும்பத்தோடு ..
வருங்கால வளத்திற்கு
வாழ்கிறான்..
..
நிகழ் காலம் அப்படி!
..
அவன் என்ன செய்வான்?