உழுவது

வயலை உழுவது கலப்பை
காகிதத்தை உழுவது பேனா
மனதை உழுவது எண்ணம்
உடலை உழுவது சுகம்
கண்களை உழுவது கண்ணீர்
நெஞ்சத்தை உழுவது வஞ்சம்
பாடலை உழுவது கவிஞன்
பாசத்தை உழுவது உருக்கம்
வெற்றியை உழுவது வீரம்
வேகத்தை உழுவது நேரம்
இயற்கையை உழுவது இறைவன்
இதயத்தை உழுவது இரக்கம்
நாதத்தை உழுவது நரம்பு
நாணத்தை உழுவது பெண்மை
உண்மையை உழுவது நேர்மை
உயர்வை உழுவது முயற்சி
மதத்தை உழுவது நம்பிக்கை
மனிதனை உழுவது மனிதம்

எழுதியவர் : பாத்திமா மலர் (25-Sep-15, 2:30 pm)
பார்வை : 120

மேலே