பாசம்
சேற்றில் வராதடா
சேற்றுப்புண் வருமென்கிறாள்,
நாற்றுநடும் அம்மா!
****************
வெயில ஏன்டா சுத்துற?
கறுத்துப்போயிடுவடான்னு
கத்துறாறு,
செங்கலறுக்கும் அப்பா!
***************
மழையில ஏன்டா நனையுற?
காய்ச்சல் வரும்ன்னு
கத்துறா,
மழையில நனைஞ்சிக்கிட்டு
மாடு ஓட்டிவரும் அக்கா!
*********************
கண்ணு ஏன்டா செவந்திருக்கு?
சீக்கிரம் தூங்குடான்னு
சொல்றான்,
நைட்சிப்டுக்குபோகும் அண்ணன்!
***************
நான் என்னதான் செய்யறது?
எங்கதான் போறதுன்னு?
கேட்ட கேள்வி
நினைவுக்கு வருது
என்
கல்லூரி படிப்பின்போதும்!!!!
***********************