நம்பிக்கை
சில நம்பிக்கைகள்..
என்னை மூடனாக்கியிருக்கலாம் ..
சில..
என்னை முடமாக்கியிருக்கலாம் ..
சில..
வெற்றிகளை தந்திருக்கலாம் ..
சில..
என்னை வீழ்த்தியிருக்கலாம் ..
ஆனாலும்..
எனது நம்பிக்கைகள் ..
என்னை இயங்க செய்து கொண்டே இருக்கின்றன..
என்ற ஒரு நம்பிக்கை மட்டும் ..
இதுவரையிலும் பொய்க்கவே இல்லை..
..
அதனால்..
நம்புகிறேன்..எனது நம்பிக்கைகள்
என்னை வாழவே வைக்கின்றன ..என்றும்..
அவை உன்னதமானவைகளே என்றும்..
..
உன்னைப் போலவே!