எழுதுகிறேன்
எழுது பொருள்
ஏதும் அறியேன்
எழுதுவதும்
நான் அறியேன்
எழுதியது
உள்ள பெருக்கால்
ஏளனம் கேட்டதுண்டு
எழுச்சியுரை கேட்டதுண்டு
நடுநிலையில்
என் மனம்
ஏக்கதால் சில வார்த்தை
ஊக்கதிற்க்காய் சில வார்த்தை
காதலுக்காய் சில வார்த்தை
காமத்திலும் சில வார்த்தை
கடவுளை நினைத்து சில வார்த்தை
அது கல்லென்று
பழித்தும் சில வார்த்தை
இயற்கையோடு சில வார்த்தை
இன்புற்றும் சில வார்த்தை
தோல்வியிலும் சில வார்த்தை
பாசாங்காய் சில வார்த்தை
பாசத்திலும் சில வார்த்தை....
வார்த்தை யுத்ததில்
வாதங்கள்
காயப்படமால் என் வார்த்தை...
கேட்டதை எழுதுகிறேன்
கேள்வி ஞானத்திலும் எழுதுகிறேன்
பார்த்ததை எழுதுகிறேன்
படித்துவிட்டு எழுதுகிறேன்
பக்கம் பக்கமாய் எழுதுகிறேன்
பக்கதிற்க்கு ஒன்றாய் எழுதுகிறேன்
வாதம் வைக்க எழுதுகிறேன்
பிடிவாதமாய் எழுதுகிறேன்...
கவிஞன் என்ற அடைமொழிக்கு
காத்திருக்க போவதில்லை
எழுது பொருள்
ஏதும் அறியேன்
எழுதுவதும்
நான் அறியேன்
பாண்டிய இளவல் (மது. க)