வலி
இந்த வலிக்கெனை நீப லிகொடுத்தால்
அந்தநில வும்வருந் தும்
ஏன் என்னைத்
திரும்பிப் பார்த்தாய்
பார்த்திராவிட்டால்
இதயத்தின் இந்தப் புத்தகம்
மூடியே இருந்திருக்கும்
இந்த வலியின் பக்கங்களாகத்
நித்தம் திரும்பிக் கொண்டிருக்காது
பார் வானத்தில்
அமுதம் சுமந்த நிலா
வலியை சுமந்து நிற்கிறது
சிவப்பு நிலவாய் !
----கவின் சாரலன்