காதல் -02 -முஹம்மத் ஸர்பான்
அடர்ந்த காட்டில்
படர்ந்த கொடி போல்
காதலாகி என்னுள்
இதயம் புதைத்தவளே!
எல்லையில்லாத
வானாய் மாறுகிறேன்.
தேயாத வெண்ணிலவாய்
என் மேல் ஒட்டிக்கொள்.
என் மனமும் மலர் போல்
உன்னிடம் இருந்தால்
வரட்சியான காதலில்
சாகாமல் உயிர் வாழ்வேன்.