எங்கப்பா நல்லவரு

நாபெத்த புள்ள
நாலெழுத்து
படிக்கனுமுன்னு
காடுமேடு அலைஞ்சு
காலை கஞ்சி
குடிச்சதுல
குருதி ஊருனது
நாலு சொட்டு
அதுல ரெண்ட சொட்ட
கண்டங்கத்திரி
செடி கொடுக்கும்
கழனிக்கு கொடுத்துட்டு
செடிய பிடுங்கி
கஞ்ச பய வியாபாரி
கேட்ட விலைக்கு
கொடுத்துட்டு
காச கையில வாங்கி
காலையில
நான் பெத்த மகராசன்
நாலு கோடு
போட்ட நோட்டு
நாலு வாங்க
வேணுமுன்னு
வெடவெடத்து
வேகமா நடக்கையில ...
அலஞ்ச அலுப்பு தீர
அலுப்பு மருந்து
வேணுமுன்னு
அரசு கடையில
கேட்டுபுட்டார்
எளவெடுத்த அரசாங்கம்
சாராய கடை
தொறந்து
டாஸ்மாக்குன்னு
புதுப்புது பேரு வச்ச
பொறுப்புள்ள அரசாங்கம்
புது மருந்து
இதுதான்னும் - இந்த
''குடி குடிகெடுக்குமுன்னு ''
புதுப்பாடம் வேற நடத்தி
நாலு நிமிசத்துல
நாலு கோடு நோட்ட
மறக்க வைச்ச
துப்பு கெட்ட
அரசாலும் அரசன விட
''எங்கப்பா நல்லவரு ''

எழுதியவர் : மா.மு.தமிழ்நேயன் (29-Sep-15, 7:53 pm)
Tanglish : engappaaa nallavaru
பார்வை : 57

மேலே