காதல்

காதல்

காலம் திருத்த விரும்பாத
தேகப்பிழை - காதல்!!!

சிந்தைக் களைப்பில்
சிறிதும் தாமதியாத
உணர்ச்சியின்
ஊடுருவல் - காதல்!!!

உடல் மயக்கம், உயிர் நெருக்கம்
ஒருசேர உணரும்
தவிப்பு - காதல்!!!

தயக்கம் தடை போட
மயக்கம் மடை போட
துணிச்சல் நடை போட
துவங்குகிறது - காதல்!!!

விழி பேசும் மொழி பயில
விலை வேண்டாம்
விடலையில்!!!

நொடிகளில் விழுங்குவதும்
நொடிகளை விழுங்குவதும்
நொடிகள் விழுங்குவதும்
கைவந்த கலை காதலுக்கு!!!

விழித்தேடலின் விடை
விரகதாபமானால்...
விவாகம்...
விவாத மேடையில்!!!

நிறை கண்டு நிறைந்த காதல்
குறை கண்ட(டு) கணம்
குறைவதேனோ?!!!

துணை வடிவில் நம்மை நாம்
காண்பதிலென்ன புதுமை???

துணை தன்னை நம் வடிவில்
காண்பதன்றோ மணவாழ்வின்
மகிமை!!!

மணமேடை பெறாத காதல்
மண்ணுக்குள்ளும் வாழும்!!!

மணவிடை பெற்ற காதல்...???

எழுதியவர் : பா.வெங்கடேசன் (29-Sep-15, 11:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 69

மேலே