சிநேகிதமே காப்பாற்று

தொண்டை வறண்டு போச்சு!
தேகம் துவண்டு போச்சு!
மண்டை வெடிச்சுப் போச்சு!
அண்டை வீட்டுக்காரியாலே!

சண்டையென்று ஏதுமில்லை!
சாதிசண்டை ஒன்றுமில்லை!
பண்டமாற்று முறையாலே
பதுங்கவேண்டி வந்ததடி!

பண்டமது மாறிவிடும்!
தவறேதும் இல்லாமல்
இங்கிருந்து அங்குமட்டும்!
அங்கிருந்தோ வந்ததில்லை!

தினந்தோறும் விருந்தாளி
தவறாமல் அவருக்குண்டு!
பதட்டமாய் ஓடிவந்து
பலபொருளை பெற்றுச்செல்வர்!

அவருக்கோ சிறுபதட்டம்!
அவரைக்கண்ட மாத்திரத்தில்
எங்கிருந்தோ ஓடிவரும்
எனக்குள்ளே பெரும்பதட்டம்!

இன்றென்ன கேட்டிடுவார்!
சர்க்கரையோ! காப்பித்தூளோ!
இல்லாத காய்கனியோ!
மறுப்பதுவும் தான் முறையோ!

ஆரம்ப நாட்களிலே
ஆசையாய்தான் தந்திட்டேன்!
அடுத்தடுத்து வரும்போது
அவஸ்தையாலே நொந்திட்டேன்!

பலமுறைதான் பக்குவமாய்
எடுத்துச்சொல்ல எண்ணிட்டேன்!
வாய்வரைக்கும் வரும்வார்த்தை
வெளியேவர மறுக்குதடி!

இல்லையென்று சொல்வதற்கு
இன்றுவரை முடியவில்லை!
இப்போதும் வருகின்றாளே!
சிநேகிதமே காப்பாற்று!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Oct-15, 10:02 pm)
பார்வை : 270

மேலே