நாசா வின் அறிவிப்பும் ஆசாமி பரிதவிப்பும்

" நாசா " வின் அறிவிப்பும் ஆசாமி பரிதவிப்பும்
************************************************************************************

செவ்வாயில் தண்ணீராம் அறிவிப்பு " நாசா "வாம்
புதனில் பள்ளிகளாம் அங்கேயும் கட்டணமாம்
வியாழனில் வர்த்தகமாம் கள்ளச்சந்தை நல்உறவாம்
வெள்ளியில் நெய் அன்றி எரிதிரியும் அங்குண்டாம்
சனி தன்னில் வெண் பனியாம் துணி மட்டும் கருப்பே ஆம்
திங்களில் பவனி வந்து உற்ற பலன் ஏதுமில்லை
ஞாயிறைச் சொல்லவில்லை சுட்டெரிக்கும் அச்சத்தில் !!

( இப்புனைவு நகைச்சுவையாய் புனையப்பட்டது )

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Oct-15, 10:07 pm)
பார்வை : 83

புதிய படைப்புகள்

மேலே