உங்க பையம்பேரு கவின்-னா

உங்க பையம்பேரு கவின்-னா?
என்னய்யா பேரு அது?

கவின்றது அழகான தமிழ் பேரய்யா. கவின்-னா அழகான - ன்னு அர்த்தம்.

என்னய்யா அநியாயமா இருக்குது. இந்த 21ஆம் நூற்றாண்டிலே நீ பெத்த செல்லப் பிள்ளைக்குத் தமிழ்ப் பேர வச்சிருக்கறயே. நாலு பேரு அநதப் பேர காதுல கேட்டா உன்னப்பத்தி என்ன பேசுவாங்கன்ற கூச்சம் கொஞ்சங்கூட உனக்கில்லையா?

ஒம் ஒடம்பில என்ன ரத்தம் ஓடுதே தெரில.

அடப் போய்யா ஒன்னுக்கும் ஒதவாத உந்தாய் மொழிப் பற்றைத் தூக்கி குப்பையிலே போடய்யா. உம் பிள்ளைக்கு நவீன்-ற அழகான இந்திப் பேர வச்சிருந்தா உனக்கு கவுரவமா இருக்கும்.

யோவ் எனக்கு என் தாயும் என் தாய் மொழியுந்தான் பெருசு. உனக்கு இருக்கறது மொழி வெறி. எனக்கு இருக்கறது மொழிப் பற்று. தமிழ் உணர்வு இல்லாத நீயெல்லாம்
அழகான தமிழ்ப் பேர பழிக்கற. நான் எந்த மொழியையும் வெறுக்கல உன்ன மாதிரி. ஏன் இனிமே இந்திலே பேசறதுதானே. ஏ உனக்குப் பிடிக்காத தமிழ்ல பேசற. போங்கய்யா இந்திப் பெயர் மோகம் உள்ளவங்க எல்லாம் இந்திலெயே பேசுங்க. அது தான் உங்களுக்கு கவுரவமா இருக்கும். சரி நவீன்-ன்னு ஒரு பேரு சொன்னயே அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

இல்ல. தெரியாது. அர்த்தம் தெரிஞ்சிட்டு யாரய்யா இந்தக் காலத்திலே பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கறாங்க?

உன்ன மாதிரி இந்திப் பெயர் வெறியனா நா இல்ல. நான் சொல்லறேன் நவீன்னுக்கு அர்த்தம்.
நவீன் - ன்னா புதுமையான, புதுமையான பொருள்னு அர்த்தம்.

போய்யா நீயெல்லாம் ஒரு தமிழன். வாழ்க! வாழ்க!

-------------------
Navin (also spelled Naveen, Hindi: नवीन, Urdu: نوین‎) is an Indian given name meaning new thing or new beginning. new start
----------
சிந்திக்க -மொழிப் பற்றை வளர்க்க -
பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய

எழுதியவர் : மலர் (2-Oct-15, 1:02 am)
பார்வை : 2273

சிறந்த நகைச்சுவைகள்

மேலே