இப்போது காதலி இளைஞனே

தண்டச்சோ றென்றப்பன் சதாதிட்டும் போதினிலும்
==தற்பெருமை பேசிநிதம் தோழருடன் ஊர்சுற்றி
உண்டச்சோ றுசெரிமா னமாதற்கு ஏதேனும்
==உழைப்பென்று செய்யாமல் உட்கார்ந்து காலத்தை
முண்டிதமாய் கழிக்கின்ற மூடரென இருக்கும் நீ
கண்டகண்ட வனிதையரைக் காதலிக்கக் கூடாது
=கண்டகன்று விட்டாலவள் கனவினிலும் கூடாது

காதலுக்கு வலைவீசும் காலத்தில் நீயந்த
==கடலோரம் நின்றுவலை வீசிட்டால் கூடஅது
தூதுவிடும் காதலியாள் சுட்டுதின்ன மீன்கொடுக்கும்.
==துப்புகெட்டு வாழும்நிலை துரத்தியுனை மனிதனாய்
ஆதற்கோர் வழிசமைத்து ஆண்பிள்ளை என்றேதான்
==அகமகிழ மெச்சியுன் அவமானம் தனைபோக்கும்
கூதலுள்ள இளம்பருவ குறுங்காதல் ஆனந்தம்
==கொடுக்காத பேரின்பம் கொடுத்துவிடும் உழைப்புனக்கு.

தொழில்தேடும் தொழில்தன்னை தொழிலாகக் கொள்ளாமல்
==தொழிலொன்று வரும்வரைக்கும் தொழில்பயிற்சி ஏதேனும்
எழிலாகக் கற்றாலும் எதிர்கால வாழ்க்கையிலே
==எதிர்நீச்சல் போடும்நிலை ஏற்பட்டு விடும்வேளை
விழிநீரைச் சிந்தாமல் வீறுநடை போடுதற்கு
==வழிகாட்டி எனநின்று வாழ்க்கைரயில் ஓடுதற்கு
பொழிவான கைகாட்டும் என்றேதான் இளைஞனே
==புரிந்தேநீ இப்போது காதலிஉன் வாழ்வினையே!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Oct-15, 3:36 am)
பார்வை : 83

மேலே