உண்மை சொல்லினால்

ஆசிரியத் தாழிசை

உண்மை சொல்லினால் உரக்கச் சொல்லினால்
மண்ணுல கத்திலே மாபெரும் சக்தியும்
அண்டி வாருமே அகிம்சை வெல்லுமே !

நன்மை செய்திட நாணுவார் வந்திடும்
பின்விளை வெண்ணிப் பிதற்றுவார் உண்மையில்
அன்பு வெல்லுமே அகிம்சை வெல்லுமே !

எத்தனை காலம் ஏமாற்றம் நேருமோ
புத்துயிர் தந்துநம் பூமி காத்திட
அத்தனை சக்திதந் தகிம்சை வெல்லுமே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (2-Oct-15, 12:51 pm)
பார்வை : 96

மேலே