தத்துவங்கள்-01

கற்றோனிடம் தலைவணங்கி செல்...!
கல்லானை தலை நிமிர செய்...!

உயர்ந்தோனை பழிசொல் சொல்லாதே...!
தாழ்தோனை இகழாதே...!

படைத்தவனிடம் பக்குவம் கற்றுகொள்...!
பகைவனிடம் பாசாங்கு செய்யாதே...!

உலகத்தாரிடம் கண் பார்த்துபேச பழகு...!
உறவுகளிடம் கள்ளமில்லா அன்பு காட்டு...!

நல்லோரை பணிந்து நட...!
தீயோரிடம் அச்சம் கொள்ளாதே...!

எழுதியவர் : அ.பெரியண்ணன் (3-Oct-15, 11:41 pm)
பார்வை : 169

மேலே