ஹைகூ கவிதைகள்

பனித்துளிக்குள் பகலவனை சிறை பிடித்தது புல்லின் நுனி.. தன்னம்பிக்கை

அவள் மேனியை தழுவியதால் புடவை பூக்கள் வாடாமல் சிரித்தது.

கூடுகட்ட குருவிக்கு தன்னைதந்தது மரம்.வீடுகட்ட வெட்டுவது மனிதம் இல்லா மனிதகரம்.

பனியில் குளிக்க,பகலவன் துடைக்க,இதழ்கள் விரிக்க,இதயம் சிரிக்க பூக்களுக்கெல்லாம் ஒரு பொற்காலம்.கார்காலம்.

தங்கத்துடன் வெள்ளியைசேர்க்கக்கூடாதாம்,கடைக்காரின் ஆலோசனை.எனவே கழற்றிவிடடி உன் கால்கொலுசை.

அவள் கூந்தலில் ஏறிய கர்வத்தால் ஆடிசிரிக்கிறது வாடும் மலர்.

எழுதியவர் : கு.தமயந்தி (4-Oct-15, 11:34 am)
Tanglish : haikuu kavidaigal
பார்வை : 366

மேலே