கடந்துவந்த பாதை
ஒரு தனிமைபடுத்தப்பட்ட
நொடியின் பிம்பங்களில் தொடங்குகிறது
மனதின்
பின்னோக்கிய பயணம்
உயிர் நீர்த்துப்போன
நொடிகளின்
பினைவுகளில் நீள்கிறது
அந்த வாழ்க்கை பாதை
மிகவும் சிக்கலான
சமுதாயத்தின்
நெரிசலில் நசுக்கப்பட்டிருந்தது
என் சுயம்
போலியான சில
உறவுகளின்
தோலுரித்து காட்டியிருந்தது
காலம்
அதற்கு சற்றுத்தள்ளி
காய்ந்து போன
உதிரத்தின் வாடை நினைவு படுத்தியது
துரோகத்தின் கூறிய
கொம்புகள் என் முதுகில் பாய்ந்த
சம்பவங்களை .
ஏமாற்றங்களினால் வெற்றிடமாக்கப்பட்ட
வாழ்க்கைக்கு
கண்ணீர்த்துளிகளும்
உடல் உமிழ்ந்த
அனல் காற்றும் தான்
துணையாய் இருந்தது
மிகவும் சோர்ந்து
போயிருந்தது
சுய நலன்களினால்
சூடுப்பட்ட என் அன்பு
ஒரு
பறவையின் எச்சத்தில் தொடங்கிய
ஒரு தனி மரத்தைப்போன்று ;
எனக்கு யாருமே துணையாய் இல்லை
என்று விரிந்த நொடிகளை
கலைத்து "டேய் கூப்பிடறது காதுல விழலயா ?
என்றபடி
அருகில் நின்றிருந்தான்
என் உயிர் நண்பன் .