கரைகிறது
கரைகிறது...!
தொட்டு -
துழாவிச் செல்ல
துணை யில்லாத
நடைவண்டி ....!
மரக்கிளையில்
தலைகீழாகத் தொங்கும் மனவௌவாலாய்....
மாட்டை வைத்து
மடியை நிறைக்கும்
பூம்பூம் -
மாட்டுக்காரனாகி....
தூண்டில் புழுவுக்கு
ஆசைப்பட்ட
மீனாய் துடிக்க...
கிராமத்து
திண்ணையின் தாயக்கோடுகளாய்...
உடைந்த
கண்ணாடி சில்களில்
ஊறும்....
சிற்றெறும்புக் கடியின் எரிச்சலாய்....
தெய்வத்தின்
பெயரால்
வெட்டுண்ட
சேவல்....
அதோ....
கசாப்பு கடையில் எடைபோடப்படும்
இதயமாய்....
இங்கு -
தெரு நாய்களின்
எச்சிலில் கரைகிறது.