வருந்துகிறேன் வருத்தமில்லை

..."" வருந்துகிறேன் ??? வருத்தமில்லை !!! ""...

வாழ்ந்துவிட்ட வாழ்க்கையிலே
வானுயரமே வளர்ந்தாலும்
பக்கம் நீ இல்லையென்று
பாசத்தாலே வருந்துகிறேன் ,,,

ஆசையெனை தின்றாலும்
வருத்தமில்லை !!!
ஆணவங்கள் அழிந்தாலும்
வருத்தமில்லை !!!

கண்ணீரே வற்றினாலும்
வருத்தமில்லை !!!
கடலலைகள் நின்றாலும்
வருத்தமில்லை !!!

பணம் காசை இழந்தாலும்
வருத்தமில்லை !!!
பயத்திலே தோற்றாலும்
வருத்தமில்லை !!!

நரகமதனை கண்டாலும்
வருத்தமில்லை !!!
நயவஞ்சக சொல்லாலும்
வருத்தமில்லை !!!

சொப்பனங்கள் இறந்தாலும்
வருத்தமில்லை !!!
சொர்க்கம்தான் சென்றாலும்
வருத்தமில்லை !!!

சோதனைகள் கொன்றாலும்
வருத்தமில்லை !!!
சோறுன்னவும் மறந்தாலும்
வருத்தமில்லை !!!

சிந்தனைகள் சிதறினாலும்
வருத்தமில்லை !!!
சிரிக்காத கொலுசொலியும்
வருத்தமில்லை !!!

வாலிபமும் கடந்தாலும்
வருத்தமில்லை !!!
வயோதிகமே வந்தாலும்
வருத்தமில்லை !!!

உருவம் காட்டும் கண்ணாடியாய்
உதிரம் சிந்திய உயிர்பொருளே
உனக்காக மட்டும்தான் என்
உயிர்வாடி வருந்துகிறேன்,,,,

என்றும் உங்கள் பாசத்தோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (5-Oct-15, 10:40 am)
பார்வை : 344

மேலே