சிதறிய கனவு
மழையில் நனைந்துவிடும்
தீர்மானத்துடன்
குடை எடுக்காமல் வெளியேறினேன்.
வானம் நிரப்பிய
கார்மேகம் கட்டியம் கூற
இப்போதோ அப்போதோ
நிகழ்ந்துவிடும் என்ற நிலையில் ..
கலாபம் விரித்து மயூரம்
நடனமிடத் தொடங்கியிருந்தது ....
காத்திருந்த அந்த
கண நெரிசல்களில்
தாமதித்து வந்தது மட்டுமன்றி
திரும்பிப் பார்த்து புன்னகை
பொழியாமல் போய்விட்டது நிலவு
அங்கே சிதறிக் கிடந்தது கனவு.
*மெய்யன் நடராஜ்