palikotam
பத்தாம் வகுப்பு சத்துணவு வாங்கிகொண்டு இருந்த நேரம்...
பேரழகி ஒருத்தி அப்பனோடு வருகிறாள் என்று
செய்தி வந்தது
அவள் வருவதற்கு முன்பே...
கையில் தட்டு இருக்க பசி தீர்ந்தது எங்கள் பாதிபேருக்கு..
நினைத்தது போலவே எங்கள் வகுப்பில் அந்த ரெட்டைசடை தேவதை..
பெயர் என்னமோ பூக்களை கிள்ளி போட்டது போலவே மனத்து கிடந்தது...
நிமிர்ந்து பார்காமலே வார்த்தைகள் வரும்
சர்கரை ஆலையில் இருந்து சீனி உதிர்வது போல..
இது என்னவென்று யாரும் விளக்கி செல்லாத உணர்ச்சிகள்
சட்டைபையுக்கு கீழே
முள் குத்தி போகும்...
எல்லாருக்கும் அவள் மீது கண் தான் அவள் தான் பேரழகியாச்சே...
எனக்கு மட்டும் நெஞ்சுகுழிக்குள் அதிகமாகவே
ஊறிக் கிடந்தது
அவள் மீதான பிரியம்...
எண்ணி சொல்லும் முறையே பேசியிருப்பாள்..
தேர்வுக்கு புகைப்படம் எடுக்கும் நாள் என்னை எதோச்சையாக உரசிப்போன ஞாபகம்...
தேர்வு முடிந்து போனாள்
எதோ சொல்ல போன என்னை
ஆறுதலாய்
ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு மட்டும்...
அதன் பின் பார்கவே இல்லை அந்த ரெட்டைசடையை..
வருடங்கள் எத்தனையோ நாட்களை தின்று தீர்த்து இருந்தது...
நேற்று எங்கோ கேட்ட குரலின் சாயல்
நெஞ்சுகுழிக்குள் இருந்து தூசி தட்டி
எடுத்து வந்தது மூளை தன் ஞாபக அலமாரிக்கு...
தன் பெயரை சொன்னாள் பெயர் மட்டுமே அடையாளமாய் இருந்தது...
என்னை பார்ததுமே அடையாளம் கண்டு கொண்டாள்
அதே இனிக்க உதிர்ந்த குரல் காரி..
எப்படி இருக்கீங்க
கல்யாணமாச்சா?..
இது தான் என் பையன்
கல்யாணத்துக்கு சொல்லிடுங்க பட்டில தான் இருக்கேன்..
பஸ்சுக்கு நேரமாச்சு வரோம்..
தோட்டத்து வேலை செய்து கருத்து போன கிளியோபாட்ர
அன்று நான் சொல்ல வந்ததை இப்போதும் கேட்காமலே போனாள்
அந்த ரெட்டைசடை பேரழகி..
அடுப்படிக்குள் இருந்து வந்த நிலவு போல...
ரெட்டைசடை தான் இப்போ ஒத்த சடை ஆயிடுச்சே......
மஞ்சள் நிலா 🌙