அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்களே

''நடிகர்கள் எல்லாம் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்களே, அதற்காகத் தியாகங்கள் செய்யத்தான் வேண்டுமா?''

''நடிகவேள் எம்.ஆர்.ராதா என் நினைவுக்கு வருகிறார். திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் பெரியார் அறிவித்த பெரும்பாலான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர் ராதா. நெருக்கடிநிலைக் காலத்தின்போது மிசாவில் கைது செய்யப்பட்ட ஒரே நடிகர் எம்.ஆர்.ராதா. அப்போது மிசா கைதிகளை அவ்வளவு சீக்கிரம் சிறையில் சந்தித்துவிட முடியாது. சிறையில் உறவினர்கள் சந்திக்கும்போதும் சிறை அதிகாரிகள் பின்னால் நின்று குறிப்பு எடுப்பார்களாம். ராதாவைச் சந்திக்க வந்த அவரது மனைவி, ''என்ன மாமா, நிறைய பேர் வெளியே வர்றாங்க. நீங்களும் எழுதிக் கொடுத்துட்டு வெளியே வர வேண்டியதுதானே?'' என்று கேட்டிருக்கிறார். உடனே ராதா, ''என்ன எழுதிக் கொடுக்கணும்?'' என்று கேட்க, ''இனிமேல் அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன்னு எழுதிக்கொடுங்க'' என்றிருக்கிறார். உடனே ராதா, ''இதோ பாரம்மா, நான் என்ன தப்பு செய்தேன்னு எனக்கும் தெரியாது, கைது செய்தவங்களுக்கும் தெரியாது. அதுதான் மிசா. நான் தூங்கிட்டு இருந்தப்ப அரெஸ்ட் பண்ணினாங்க. அதுதான் நான் செஞ்ச தப்புன்னா, அப்ப இனிமே வாழ்நாள் முழுக்கத் தூங்கவே கூடாதா?'' என்று கேட்க, குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்த சிறை அதிகாரியும் சிரித்துவிட்டாராம்!''


நானே கேள்வி.. நானே பதில்!

எழுதியவர் : Vikatan EMagazine-- கே.விக்னேஷ், விழுப (8-Oct-15, 9:25 am)
பார்வை : 81

மேலே