அடுத்த பக்கத்திற்கு போ

இரவல் அனுபவங்களை
இதமாக வார்த்து எழுதும்
கவிதைகள் கோடி ..அதில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்..
சொந்த வலிகளும்..
எச்சிலாய் எண்ணி துப்பப்பட்ட
துயரங்களும்
இறைந்து கிடக்கலாம்..
மனிதத்தை வரையறுக்கும்
மனம் தொடும் நிகழ்வுகள்
பொறிக்கப் பட்டிருக்கக்கலாம் ..
அவைகள் கண்களில் படும் போது..
கை விரல்கள்..
தானாக இயங்கி..
அடுத்த பக்கங்களைத் துரத்திட..
அந்த விரல்களின் கீழே..
தேய்ந்துகொண்டே இருக்கிறது
மனிதம் !

எழுதியவர் : கருணா (9-Oct-15, 10:12 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 124

மேலே